பிரித்தானியாவின் ஆயுதப்படை அமைச்சர் ராஜினாமா., புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
பிரித்தானிய அரசில் பாதுகாப்பு நிதி தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஆயுதப்படை அமைச்சர் அல் கார்ன்ஸ் (Al Carns) தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
அல் கார்ன்ஸ், பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், அரசின் பாதுகாப்பு முதலீட்டு திட்டம் போதுமான நீதியுடன் இல்லை என்றும், நாட்டை பாதுகாக்க தேவையான அளவிற்கு மாற்றம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், ஜான் ஹீலி தனது ராஜினாமா கடிதத்தில், "இப்போதைய பாதுகாப்பு செலவுகள், நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கு இல்லை" என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த ராஜினாமாக்கள், பிரதமர் ஸ்டார்மரின் தலைமையையும், அவரது எதிர்காலத்தையும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன.
தற்போது, பாதுகாப்பு அமைச்சராக புதிதாக டான் ஜார்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு, 2035-க்கும் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் 3.5 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவிடும் என உறுதியளித்துள்ளது. ஆனால், நிதி திரட்டப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த விவகாரம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்பாக அரசுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |