எனக்கு வேறு வழி இல்லை., ராஜினாமா செய்த பாதுகாப்புத்துறை செயலாளர்
பிரித்தானிய பாதுகாப்புத் துரைச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey), பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்திலிருந்து ராஜினா செய்துள்ளார்.
காரணம், புதிய பாதுகாப்பு முதலீட்டு திட்டம் (Defence Investment Plan) நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹீலி தனது ராஜினாமா கடிதத்தில், "இவ்வளவு ஆபத்தான காலத்தில், நமது படைகளுக்கு தேவையான வளங்களை வாழங்காத திட்டத்தை ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை தான் முழுமையான நிதி விவரங்களை பெற்றதாகவும், அதனை ஏற்க முடியாததால், ராஜினாமா தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பாதுகாப்பு செலவுகளை விளக்குவதாக இருந்தாலும், வெளியீடு தாமதமாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் கூடுதலாக 28 பில்லியன் நிதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹீலி, உக்ரைனுக்கு ஆதரவு அளித்தது, நாட்டு பாதுகாப்பில் பிரித்தானியாவை முன்னணி குரலாக மாற்றியது போன்ற சாதனைகளை நினைவுபடுத்தியுள்ளார். ஆனால், நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, படைகளின் தயார்நிலை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
அவரது ராஜினாமா, பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. எ
திர்க்கட்சிகள், ஹீலி நாட்டின் பாதுகாப்பை மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்தார், ஆனால் அரசு அதை புறக்கணித்துள்ளதாக விமர்சித்துள்ளன.
இந்த சம்பவம், பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |