பிரித்தானியாவின் GDP-யில் 2.5% பாதுகாப்பு செலவினமாக அறிவிப்பு! பிரதமர் ஸ்டார்மர் அதிரடி
2027-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% பாதுகாப்பு செலவினமாக அதிகரிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திடீரென வெளியிட்ட அறிவிப்பு, நாட்டின் பாதுகாப்பு செலவினத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நாட்டின் பாதுகாப்பு செலவினங்கள் படிப்படியாக அதிகரிப்பதற்கு பதிலாக, 2027-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5% பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர்(Sir Keir Starmer) அறிவித்துள்ளார்.
"This government will begin the biggest sustained increase in defence spending since the end of the Cold War"
— BBC Politics (@BBCPolitics) February 25, 2025
PM Keir Starmer announces the UK will raise defence spending to 2.5% of GDP by 2027
Follow live https://t.co/wkfLLt4zUU pic.twitter.com/XFdBvcSX1H
இந்த விரைவான அதிகரிப்பு, 2027-ல் இருந்து ஆண்டுக்கு £13.4 பில்லியன் பாதுகாப்பு நிதியில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும்.
பனிப்போருக்குப் பிறகு பிரித்தானியாவின் பாதுகாப்பு திறன்களில் இதுவே மிகப்பெரிய நிதி முதலீடு என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் குறிப்பிட்டு பேசினார்.
மேலும், உளவுத்துறையின் முக்கிய பங்களிப்பை பாதுகாப்பு கட்டமைப்பில் அங்கீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Labour is protecting the British people.@Keir_Starmer is increasing defence spending to 2.5% from April 2027. pic.twitter.com/YYNhyKX2Dn
— The Labour Party (@UKLabour) February 25, 2025
இதன் விளைவாக, உளவுத்துறை செலவினத்தையும் சேர்த்து, 2027-ல் பிரித்தானியாவின் மொத்த பாதுகாப்பு தொடர்பான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6% ஆக உயரும்.
அத்துடன் சாதகமான பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளுக்கு உட்பட்டு, அடுத்த பாராளுமன்ற காலத்தில் பாதுகாப்பு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு செலவின இலக்கை விரைவுபடுத்துவதே இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாகும்.
அமெரிக்க அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு நாட்டின் மூலோபாய முன்னுரிமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |