தலைமறைவுக் குற்றவாளிகளின் கூடாரமாக ஆகும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை: பிரித்தானிய அமைச்சர்
ஊழலுக்கெதிரான அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றிற்காக இந்தியா வந்துள்ள பாதுகாப்புக்கான பிரித்தானிய அமைச்சர், தலைமறைவுக் குற்றவாளிகளின் கூடாரமாக ஆகும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
நீரவ் மோடி, விஜய் மல்லையா தொடர்பில் கேள்வி
நிதி மோசடி செய்துவிட்டு, பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் பாதுகாப்புக்கான பிரித்தானிய அமைச்சரான Tom Tugendhat.
நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே இதுபோன்ற விடயங்கள் தொடர்பில் சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
ஆனாலும், குற்றம் செய்பவர்கள் தப்பி வந்து ஒளிந்துகொள்ளும் நாடாக ஆகும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்பதை மட்டும் தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றார் Tom Tugendhat.
நீரவ் மோடி, இந்தியாவில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 பில்லியன் டொலர்கள் கடன் மோசடி செய்துவிட்டு பிரித்தானியாவுக்குத் தப்பியோடிவிட்டார்.
விஜய் மல்லையாவோ, இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் சென்றுவிட்டார்.
இருவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான நடைமுறைகள் தாமதமாகிக்கொண்டே வருவதையடுத்தே ஊடகவியலாளர்கள் அது தொடர்பாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |