ரஷ்ய ராணுவம் அதை செய்யவில்லை..உக்ரேனிய வீரர்களுக்கு சிறந்தவற்றை வழங்குவோம்..பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்
நாங்கள் உக்ரேனிய வீரர்களுக்கு சிறந்த அடிப்படை திறன்களை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் - பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ்
உக்ரைனின் ஆயுதப்படைகளுக்கு கூடுதலாக 1,000 வான் ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை விரைவில் முடிப்பதாக பிரித்தானியா கூறியது
குளிர்காலத்தில் உக்ரேனிய வீரர்களுக்கு பிரித்தானியா தனது ஆதரவை அளிப்பதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு நகரமான லிடிலில், உக்ரேனிய துருப்புகளுக்கு பயிற்சி அளிப்பதை நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கவனித்து வருகிறார். அவருடன் பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் இணைந்து கொண்டார்.
அப்போது உக்ரைனுக்கு மேலும் 12,000 தீவிர குளிர்-வானிலை தூக்க கருவிகளை அளிப்பதாக பிரித்தானியா அறிவித்தது. உக்ரைனுக்கு உதவுவது பேசிய பென் வாலஸ், 'குளிர்காலம் நெருங்கி வருகிறது, அது இரு தரப்பினருக்கும் ஒரு முக்கியமான சவாலாகும். எனவே நாங்கள் உக்ரேனிய வீரர்களுக்கு சிறந்த அடிப்படை திறன்களை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில், ரஷ்ய ராணுவம் அதை செய்யவில்லை என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்' என தெரிவித்தார்.
REUTERS/Chris Radburn
கெர்சன் பகுதியில் உக்ரைனின் முன்னேற்றங்கள், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவது ஏன் மிகவும் முக்கியமானது என்று கூறிய வாலஸ், நாட்டின் கிழக்கில் உக்ரைன் இன்னும் முன்னேறுவதாக குறிப்பிட்டார்.
REUTERS/Chris Radburn
அத்துடன் தெற்கில் கெர்சனை நெருங்குவது மெதுவாக இருந்தாலும், நிச்சயமாக உக்ரைன் அடைந்து விடும் எனக் கூறிய வாலஸ், இது ஒரு கடினமான சண்டை என்றும் குறிப்பிட்டார்.
REUTERS/Chris Radburn
இதற்கிடையில், உக்ரைனின் ஆயுதப்படைகளுக்கு கூடுதலாக 1,000 வான் ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை விரைவில் முடிப்பதாகக் கூறியது. இவை, ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உள்ளிட்ட வான் இலக்குகளை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை ஆகும்.
Zuma Press/Alamy