சவுதி அரேபியாவை பாதுகாக்க போர் விமானங்களை அனுப்பும் பிரித்தானியா
UK Deploys Jets to Defend Saudi Arabia 2026: சவுதி அரேபியாவிற்கு பிரித்தானியா போர் விமானங்களை அனுப்பவுள்ளது.
சவுதி அரேபியாவிற்கு போர் விமானங்களை அனுப்பும் பிரித்தானியா
பிரித்தானிய அரசு, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து சவுதி அரேபியாவை பாதுகாக்க ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) டைஃபூன் போர் விமானங்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு பணி மட்டுமே
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விமானங்கள் “பாதுகாப்பு பணி” மட்டுமே மேற்கொள்ளும் என்றும், ஹவுதி குழுவை நேரடியாக தாக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சவுதி நகரங்கள் மற்றும் முக்கிய தேசிய அடிப்படை வசதிகளை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து காப்பதற்காக பிரித்தானிய விமானங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், சவுதி விமான நடவடிக்கைகளுக்கு தேவையான “air-to-air refuelling” ஆதரவும் வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீப வாரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மற்றும் ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கு பதிலளிக்க சவுதி தலைமையிலான கூட்டணி ஹவுதி நிலைகளில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், “சவுதி அரேபியாவுக்கு எதிரான ஹவுதி தாக்குதல்கள் மிகவும் கேவலமானவை. குறிப்பாக ரியாத் விமான நிலையத்தை குறிவைத்தது நிலைமை மோசமடைந்ததை காட்டுகிறது. அதனால் கூடுதல் ராணுவ ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் இந்த முடிவு, வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் எரிசக்தி விலை உயர்வுகளும் காரணமாகும் என அல்ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக எகிப்து ராணுவத்தை அனுப்பும் விவகாரத்தில் எகிப்து நாடாளுமன்றம் வாக்கெடுப்பை தாமதித்துள்ள சூழ்நிலையில் வெளிவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |