வெற்றிகரமாக இரண்டாவது புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பிய பிரித்தானியா
One in, one out திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் பிரித்தானியாவின் முயற்சி முதல் கட்டத்திலேயே தோல்வியடைய, புலம்பெயர்ந்தோர் இல்லாமலே 4 விமானங்கள் பிரான்ஸ் சென்றடைந்தன.
இந்நிலையில், வெற்றிகரமாக இரண்டுபேரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்!
திருப்பி அனுப்பப்பட்ட இரண்டுபேர்
நேற்று இந்தியரான ஒரு புலம்பெயர்ந்தோர் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றில் பிரான்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 6.30 மணிக்கு எரித்ரியா நாட்டவரான ஒரு புலம்பெயர்ந்தோர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, பிரித்தானிய உள்துறைச் செயலராக பொறுப்பேற்றிருக்கும் ஷபானா மஹ்மூத், இந்த நாடுகடத்தல் நமது எல்லைகளை பாதுகாப்பதில் முக்கியமான முதல் கட்டமாகும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயம், சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் பிரித்தானியர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது, அது என்னவென்றால், நீங்கள் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால், உங்களைத் திருப்பி அனுப்புவோம் என்பதுதான் அந்த செய்தி என்றும் கூறியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழைந்த இரண்டு பேரை பிரித்தானியா பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
ஆனால், அவர்கள் பிரான்சைச் சென்றடைந்த சிறிது நேரத்தில், 20க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோர் பிரான்சின் Gravelines என்னுமிடத்திலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக படகுகளில் ஏறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |