காசாவிலிருந்து வெளியேறுவதற்காக எல்லைக்கு வந்த பிரித்தானியர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள செய்தி
காசாவிலிருந்து வெளியேறுவதற்காக ரஃபா எல்லைக்கு வந்த பிரித்தானியர் ஒருவர், மீண்டும் காசாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
காசாவிலிருந்து வெளியேற சிலருக்கு அனுமதி
படுகாயமடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள், காசாவிலிருந்து ரஃபா என்னும் காசா எகிப்து எல்லை வழியாக வெளியேற, குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
இந்த ரஃபா என்பது, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ஒரே எல்லை கடக்கும் பகுதியாகும்.
பிரித்தானியருக்கு காத்திருந்த ஏமாற்றம்
வேல்ஸ் நாட்டவரான Ahmed Sabra என்னும் மருத்துவர், இஸ்ரேல், காசா மீது போர் அறிவித்த நேரத்தில் காசாவில்தான் இருந்துள்ளார். தற்போது அவர் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப முயற்சித்து வரும் நிலையில், எல்லை வரை சென்றுவிட்டு அவரது குடும்பம் ஏமாற்றமடைந்து திரும்பியதாக வேல்ஸிலுள்ள Swansea மேற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Geraint Davies தெரிவித்துள்ளார்.
மனைவி குழந்தைகளுடன் Ahmed ரஃபா எல்லையைச் சென்றடைய, காசாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்கள் எகிப்து அதிகாரிகள்.
Ahmed குடும்பம், பேருந்து ஒன்றில் மீண்டும் காசாவுக்கே திருப்பி அனுப்பப்பட, அதிர்ச்சியடைந்துள்ள Ahmed, தாக்குதல் நடக்கும் நேரத்தில் மீண்டும் காசாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது, மரண தண்டனை போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
அவரை பத்திரமாக பிரித்தானியா கொண்டுவர பிரித்தானிய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார், Swansea மேற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Geraint Davies.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |