பிரித்தானியாவில் மிதித்தே கொல்லப்பட்ட முதியவர்... கைதான சிறுவர்கள்: அதன் பின்னர் நடந்த சம்பவம்
பிரித்தானியாவில் நாயுடன் நடக்க சென்ற முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 சிறுவர்கள் கைதாகியுள்ளனர்.
நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்
பிரித்தானியாவில் லீசெஸ்டர்ஷைர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் 80 வயது முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் 12 முதல் 14 வயதுடைய ஐந்து சிறுவர்கள் கைதாகியுள்ளனர்.
இதில் தற்போது நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 1ம் திகதி மதியத்திற்கு மேல் 80 வயதான பீம் சென் கோஹ்லி என்பவர் தமது நாயுடன் பிராங்கிளின் பூங்காவில் நடக்க சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் காயங்கள் காரணமாக அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்துளனர்.
உதவ முன்வர வேண்டும்
இந்த வழக்கில் 14 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் சிறுமி, 12 வயதுடைய 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகினர். ஆனால் 14 வயது சிறுவன் மட்டும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, எஞ்சியவர்களை எந்த நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறன்று சம்பவம் நடக்கும் போது மணி 6.30 இருக்கும் என்றும் பூங்கா வாசலருகேயே அந்த நபர் தாக்கப்பட்டுள்ளார் என்றும் லீசெஸ்டர்ஷைர் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அந்த சிறார்கள் அங்கிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. தற்போது கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |