குடும்ப விசாவிற்கான புதிய குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியை கைவிட்ட ஸ்டார்மர் அரசு
குடும்ப விசாவிற்கான புதிய குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியை ஸ்டார்மர் அரசு கைவிட்டது.
பிரித்தானிய பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வர, இனி வருடத்திற்கு குறைந்தபட்சம் 38,700 pounds (ரூ. 1.48கோடி) சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.
முந்தைய ரிஷி சுனக் (Rishi Sunak) அரசு கொண்டுவந்த குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியை, கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும், ஏற்கெனெவே இருந்த ஆண்டு வருமான வரம்பில் எந்த அதிகரிப்பும் இப்போதைக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி மாற்றங்கள் இல்லை பிரித்தானியாவில் தற்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துவரத் தேவையான ஆண்டு வருமானம் என்பது £29,000 (இலங்கை ரூ. 1.11 கோடி) ஆகும்.
இந்த வரம்பை உயர்த்துவதால் ஏற்படும் குடும்பங்களின் மீதான தாக்கத்தை, குடியிருப்பு ஆலோசனை குழு (MAC) பரிசீலிக்கும் வரை, கூடுதலாக எந்த உயர்வும் இருக்காது என்று பிரித்தானிய உள்துறை செயலர் எவெட் கூப்பர் (Yvette Cooper) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும், கூப்பர் தனது எழுத்துபூர்வமான அறிக்கையில், "குடும்ப குடியிருப்பு விதிகள், குறைந்தபட்ச வருமானத் தேவை உட்பட, குடும்ப வாழ்வின் மதிப்பை சமநிலைப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் மாணவர்கள் உடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 80% குறைந்துள்ளததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK drops Rs 41 lakh minimum income rule for Family Visa, UK minimum income rule for Family Visa, UK family Visa