ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்கும் பிரித்தானியர்களின் அந்தப் பழக்கம்: எச்சரிக்கும் NCA
பிரித்தானியாவில் சாதாரண மக்களின் போதைப்பொருள் பயன்பாடு உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியளிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பணமோசடியாளர்கள்
அத்துடன், உலகளாவிய பணமோசடி குழுக்களின் மூலம் பிரித்தானிய மண்ணில் உளவு நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கப்படுவதாக சட்ட அமலாக்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவின் 28 நகரங்கள் மற்றும் கிராமங்களில் செயல்பட்டுவரும் ஒரு வங்கியானது, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை சட்டப்பூர்வமான கிரிப்டோகரன்சியாக மாற்றுவதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தேசிய குற்றவியல் முகமையானது கடந்த 12 மாதங்களில் 45 சந்தேகத்திற்குரிய பணமோசடியாளர்களைக் கைது செய்து 5 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றியுள்ளது.
மேலும், சைபீரிய கோடீஸ்வரரான Ekaterina Zhdanova என்பவர் நடத்தி வந்த பண மோசடி நடவடிக்கைகளையும் பிரித்தானிய அதிகாரிகள் கடந்த ஆண்டு முறியடித்துள்ளனர்.
ஆனால், பிரித்தானிய மக்களின் சாதாரண போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் ரஷ்ய அரசின் தீய செயல்களுக்கும் இடையிலான பயங்கரமான தொடர்பு முதல் முறையாக அம்பலமாகியுள்ளது என துணை இயக்குநர் சால் மெல்கி வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானியர் ஒருவர் போதைப்பொருள் வாங்குகிறார் என்றால், அந்த நிதி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பிற குற்றவாளிகள் சம்பாதித்த பணம், குறிப்பிட்ட குழுக்களால் மாற்றப்படுவதற்காக நகர்த்தப்படுகிறது என்று மெல்கி விளக்கியுள்ளார். இந்தப் பணம் பின்னர் ரஷ்ய உளவுத்துறைத் திட்டங்கள், இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கும், அரசு ஆதரவு பெற்ற அமைப்புகள் தடைகளைத் தவிர்க்க உதவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் மெல்கி.
ரஷ்ய போர் நடவடிக்கைகளுக்கு
ரஷ்ய உளவுத்துறை Zhdanova என்பவரின் அமைப்பைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் செயல்படும் பல்கேரியா குற்றவியல் குழுக்களுக்கு நிதியளித்து வந்துள்ளது.
NCA மற்றும் ஸ்காட்லாந்து யார்டு ஆகியவை குற்றவாளிகளிடமிருந்து பணத்தை சேகரித்து, பணமோசடி செய்பவர்களின் சார்பாக அதை கொண்டு செல்லும் கூரியர்களை தொடர்ச்சியாக கைது செய்துள்ளன.

மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளால் சம்பாதித்த 6 மில்லியன் பவுண்டுகள் தொகையை கிரிப்டோகரன்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மொத்தமாக 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த பணம் ரஷ்ய போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமானது. பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் தெரிவிக்கையில்,
இந்த சிக்கலான நடவடிக்கை, பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கவும், உக்ரைனில் அதன் சட்டவிரோதப் போருக்கு நிதியளிக்கவும் ரஷ்யா பயன்படுத்திய ஊழல் தந்திரங்களை அம்பலப்படுத்தியுள்ளது என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |