பிரித்தானியாவில் மசாஜ் நிலையம் நடத்தி வந்த நபரால் பல பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
பிரித்தானியாவில் மசாஜ் நிலையம் நடத்தி வந்த நபர் மீது பெண்கள் தொடர்ந்து கொடுத்த புகார்கள் மீதான விசாரணைக்கு பிறகு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Burnopfield-ஐ சேர்ந்தவர் ஸ்டீவன் கோஸ். இவர் மசாஜ் நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில் 2014ல் இருந்து 2020 வரையிலான காலக்கட்டத்தில் மசாஜ் நிலையத்திற்கு வரும் பெண்கள் பலரிடம் உடைகளை கழட்டுமாறு கூறி அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான புகாரில் கடந்த 2020ல் ஸ்டீவனுக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடுதலாக அடுத்தடுத்து 5 பெண்கள் கொடுத்த புகார் தொடர்பான விசாரணை துர்ஹம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் வாழ்நாள் குற்றவாளியாக கையெழுத்து போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை அதிகாரி கிரையம் வைட்பீல்ட் கூறுகையில், ஸ்டீபன் ஒரு மோசமான பாலியல் குற்றவாளி. சில சந்தர்ப்பங்களில் தன்னால் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியிருக்கிறார்.
அவரால் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலுடன் வெளியில் வந்து புகார் கொடுத்தனர், இப்போது அவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.