லண்டனில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 100 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
லண்டனில் தீ விபத்து
கிழக்கு லண்டனின் பவ்(Bow) பகுதியில் ஃபேர்ஃபீல்ட் சாலையில் உள்ள 6 மாடி வணிக மைய கட்டிடத்தில் மாலை 6 மணிக்கு பிறகு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் தீ மற்றும் கரும்புகை பிரம்மாண்டமாக வெளிப்பட்டதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் லண்டன் தீயணைப்பு படைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
Huge raging fire on Bow Road, Tower Hamlets, East London. Believed to be the business centre. pic.twitter.com/yem9zjuJBp
— tarekrevs (@tarekrevs) August 25, 2023
பெத்னல் கிரீன், வைட்சேப்பல், ஹோமர்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் தீயணைப்பு குழுக்கள் விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு குவிந்துள்ளனர்.
இது தொடர்பாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ள தகவலில், 15 தீயணைப்பு வாகனங்களை சேர்ந்த 100 தீயணைப்பு வீரர்கள் வணிக மைய கட்டிடத்தின் பகுதியில் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 6 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மேற்கூரையின் பாதி அளவில் தீ எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MALCOLM BALEN
பொதுமக்கள் வெளியேற்றம்
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், வைட்சேப்பல் மருத்துவமனையில் உள்ள பெண் ஒருவர் மூன்று மைல் தொலைவில் இருந்து தீயை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டிடத்தின் அருகாமை கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், பேருந்துகள் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
JONATHAN BRADY
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |