பிரித்தானியாவில் மசூதியில் தீ வைப்பு: வெறுப்பு குற்றத்தின் கீழ் பொலிஸார் விசாரணை
கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மசூதிக்கு தீ வைப்பு
கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவன்(Peacehaven) பகுதியில் அமைந்துள்ள மசூதியில் மர்ம நபர்களால் தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை இரவு சுமார் 9:50 மணியளவில் தீ விபத்து தொடர்பாக தகவல் நிலையில் சசெக்ஸ் பொலிஸார் இந்த சம்பவத்தை வெறுப்பு குற்றத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த வீடு ஒன்றின் சிசிடிவி காட்சிகளில், முக்கிய தடயம் ஒன்று கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் இரண்டு நபர்கள் இருப்பதும், அதை தொடர்ந்து சில நிமிடங்களில் தீ விபத்து ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |