பிரித்தானிய பொருளாதாரம் வளர்ச்சி: பிப்ரவரில் 0.5% வரை GDP உயர்வு
பிரித்தானியாவின் பொருளாதாரம் பிப்ரவரி மாதத்தில் 0.5% வளர்ச்சியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பொருளாதாரம் வளர்ச்சி
சந்தை வல்லுநர்கள் முன்வைத்திருந்த கணிப்புகளை முறியடித்து பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் 0.5% வரை வளர்ச்சியடைந்துள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள் படி, ஜனவரி மாதம் பிரித்தானிய பொருளாதாரத்தில் காணப்பட்ட மந்த நிலைக்கு பிறகு தற்போது மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து இருப்பது முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வளர்ச்சியான நாட்டின் தொழில் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக உருவாகியுள்ளது.

துறை ரீதியான வளர்ச்சி
தரவுகளின் படி, பிரித்தானிய சேவை துறை மாத அடிப்படையில் 0.5% வரை வளர்ச்சியை எட்டியுள்ளது.
அதைப்போல தொழில்முறை உற்பத்தியில் 0.5% வரை வளர்ச்சியும், கட்டுமான துறையில் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 1% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |