பிரித்தானிய தேர்தல் 2024: வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியினர்
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத அளவில், இம்முறை இந்திய வம்சாவளியினர் 107 பேர் போட்டியிட்டுள்ளார்கள்.
வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியினர்
சமீபத்திய நிலவரப்படி, அவர்களில் யார் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷி சுனக்
பிரித்தானியாவுக்கு அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரையில் பிரதமர் பொறுப்பிலிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ரிஷி சுனக், தான் போட்டியிட்ட Richmond and Northallerton தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஆனால், அவரது கட்சி பிரித்தானிய பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியைத் தங்கள் வசம் வைத்திருந்த கன்சர்வேட்டிவ் கட்சி, தற்போது லேபர் கட்சியிடம் படுதோல்வி அடைந்துள்ளது.
ஷிவானி ராஜா
ரிஷிக்கு முற்றிலும் எதிராக, லேபர் வசம் இருந்த Leicester East gaining இருக்கையை கைப்பற்றியுள்ளார், கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான ஷிவானி ராஜா.
கனிஷ்கா நாராயணன்
இந்தியாவில் பிறந்து, தனது 12ஆவது வயதில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த கனிஷ்கா நாராயணன், Vale of Glamorgan தொகுதியில், லேபர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வேல்ஸ் நாட்டில் சிறுபான்மையின பின்னணிகொண்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சுவெல்லா பிரேவர்மேன்
கன்சர்வேட்டிவ் கட்சியனரான, முன்னாள் பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா, தான் போட்டியிட்ட Fareham and Waterlooville தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |