வரலாறு படைத்த லேபர் கட்சி: கருத்துக்கணிப்புகளை விஞ்சிய தேர்தல் வெற்றி!
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை விட அதிகமான இடங்களை லேபர் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி
பிரித்தானியா பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் லேபர் கட்சிக்கு சாதகமாக இருந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவுகளும் லேபர் கட்சிக்கு சாதகமாக முடிந்துள்ளது.
மேலும் சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
கருத்துக்கணிப்புகளை தாண்டிய வெற்றி
இந்த பிரித்தானிய பொது தேர்தலில் லேபர் கட்சி நேற்று இரவு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை விட கூடுதலான இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் லேபர் கட்சி 410 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை விட கூடுதலாக 412 இடங்களை லேபர் கட்சி கைப்பற்றியுள்ளது.
#UKElection2024 pic.twitter.com/SM7KLV5BkK
— Satyendra (@saten_08) July 5, 2024
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இறுதியாக வந்த YouGov’s கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 431 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்த நிலையில், அதைவிட குறைவான இடங்களையே சர் கீர் ஸ்டார்மர் கைப்பற்றியுள்ளார்.
அதே சமயம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெறும் 121 இடங்களில் மட்டுமே கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
Liberal Democrats இந்த தேர்தலில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். 61 இடங்களில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது./// கடந்த தேர்தலை விட 63 இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |