பெரும் பின்னடைவில் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி: பரபரப்பூட்டும் பிரித்தானிய தேர்தல் முடிவுகள்!
பிரித்தானியாவில் நடைப்பெற்று வரும் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 113 இடங்கள் மற்றும் 6 கவுன்சில்களை பிரதமர் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி இழந்துள்ளது.
பிரித்தானியாவின் பெருநகர சபையின் உறுப்பினர்கள் தேர்தல், மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகியவற்றில் உள்ள உள்ளூர் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகியவை நேற்று (மே 5ம்) திகதி நடைப்பெற்றது.
இவற்றில் பிரித்தானிய பெருநகர சபையில் மட்டும் கிட்டத்தட்ட 4,411 இடங்கள் உள்ளடக்கிய 146 கவுன்சில்களுக்கான தேர்தல் நேற்று (மே 5ம்) திகதி நடைப்பெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 6ம் திகதியான இன்று நடைப்பெற்று வரும் நிலையில், இதில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து வருகிறது.
மொத்தமுள்ள 146 கவுன்சில்களில் இதுவரை வெளிவந்துள்ள 76 கவுன்சில் முடிவுகளில் Conservatives கட்சி 18 கவுன்சில்களை கைப்பற்றியும், 6 கவுன்சில்களை இழந்தும் உள்ளது, மேலும் இதன் மூலம் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி இதுவரை 515 இடங்களை மட்டுமே கைபற்றி 113 இடங்களை இழந்துள்ளது.
சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான Labour கட்சி கூடுதலாக 4 கவுன்சில்களை கைப்பற்றி மொத்தம் 36 கவன்சில் அதிகாரத்தை இதுவரை கைப்பற்றியுள்ளது, தனிப்பட்ட வேட்பாளர் இடங்களை பொறுத்தவரை Labour கட்சி கூடுதலாக 36 இடங்களை கைப்பற்றி இதுவரை 1,162 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தலில் மற்றொரு முக்கிய கட்சியான Liberal Democrats கட்சி கூடுதலாக 1 கவுன்சில் அதிகாரத்தையும், 47 தனிப்பட்ட வேட்பாளர் இடங்களையும் கைப்பறியதன் மூலம் மொத்தம் 4 கவுன்சில் இடங்களையும், 242 வேட்பாளர் இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: போரிஸ் ஜான்சனின் கட்சியை பின்னுக்கு தள்ளிய Labour கட்சி!
இந்த தேர்தல் குறித்து தேர்தல் ஆய்வாளர் மைக்கேல் த்ராஷர் கூறுகையில், இந்த வெற்றி Labour கட்சிக்கு நடக்கவிருக்கும் பொது தேர்தலில் மிகப்பெரிய ஆதாயங்களை பெற்று தருமா என்று தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த முடிவுகளானது போரிஸ் ஜான்சனின் பெரும்பான்மை அழிக்கும் என தெரிவித்துள்ளார்.