பிரித்தானியாவில் புதைந்திருந்த கல்லறையில் கிடைத்த ரோமானியர்களின் சவப்பெட்டிகள்: ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
பிரித்தானியாவிலுள்ள கார்போர்த் கல்லறையில் ரோமானியர்களை அடக்கம் செய்து வைத்திருந்த சவப்பெட்டிகள் கிடைத்துள்ளன.
ரோமானிய சமாதிகள்
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த கல்லறையில் ஈயச் சவப்பெட்டிகள் கிடைத்துள்ளன. அதற்குள்ளிருந்த ரோமானிய சவப்பெட்டியில் அரச குடும்பத்தில் வாழ்ந்த பெண்ணின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
@LEEDS CITY COUNCIL
லீட்ஸிலுள்ள கார்போர்த்தில் 60 பெண் சடலங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளன. இந்த எழும்புக் கூடுகளில் பிற்கால ரோமன் மற்றும் ஆரம்பக்கால சாக்சன் இனத்தின் ஆண்கள் மற்றும் பெண்களாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
@LEEDS CITY COUNCIL
மேற்கு யார்கூயரில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஆங்கோ-சாக்சன் கல்லறையாக இது கருதப்படுகிறது. நிலையான தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட கார்ப்போர்த் எனும் பகுதியில் இது கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கிலோ-சாக்சன்
சவப்பெட்டி ஈயத்தால் ஆனது என்றும் கிடைத்த எலும்புக்கூடுகள் வரலாற்று ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாக இருக்குமென நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கல்லறையில் காணப்படும் பிற அடக்கம் மற்றும் நடைமுறைகள் ஆரம்பக்கால கிறிஸ்துவ நம்பிக்கைகள் மற்றும் சாக்சன் இனத்தின் சடங்குகளைக் குறிக்கின்றன. கத்திகள் மற்றும் மண்பாண்டங்கள் போன்ற தனிமனித உடைமைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
@LEEDS CITY COUNCIL
அகழ்வாராய்ச்சியில் பணிபுரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 400AD இல் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலோ-சாக்சன் ராஜ்யங்களின் நிறுவனத்திற்கும் இடையில் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை விளக்குவதற்கு இந்த தளம் உதவும் என்று நம்புகிறார்கள்.
@LEEDS CITY COUNCIL
"தொல்பொருள் வழிமுறைகள் மற்றும் அறிவியல் நுட்பங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றியும் நாம் கண்டுபிடிக்க முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்களை நாங்கள் ஒருபோதும் அறிய மாட்டோம்." எனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹண்டர் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.