லண்டனில் துன்புறுத்தப்பட்ட 2 திருநங்கைகள்! LGBT குறித்த விழிப்புணர்வை மேற்கொள்வோம் என அறிவிப்பு
லண்டனில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரை துன்புறுத்தி எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது. மேலும் இதுகுறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜனவரி 20 திகதி, Valentino Kyriakou, (20) மற்றும் Naya Martinez (21) என்ற இரண்டு மாற்றுப்பாலினத்தவர்கள் லண்டனில் Bridge Road பகுதியில் உள்ள சிக்கன் கடையில் உணவு ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்த வேளையில் ஒரு கூட்டம் தங்களை குவி அழைத்து கிண்டல் செய்ததாகவும், இனி இந்தப்பகுதிக்கு வந்தால் கத்தியால் குத்திவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதை அந்த குழுவில் உள்ள ஒரு நபர் tik-tok கில் பதிவேற்றியுள்ளார். பதிவேற்றிய அந்த வீடியோ பல்வேறு தரப்பு மக்களால் பார்க்கப்பட்டு,பகிரப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை செய்துவருவதாகவும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து Valentino Kyriakou, (20) கூறுகையில் நாங்கள் உணவுக்காக காத்திருந்த வேளையில் ஒருகூட்டம் எங்களை அழைத்து கிண்டல் செய்தனர், மேலும் இனி இந்த பகுதியில் தங்களை பார்த்தால் கத்தியால் குத்தி விடுவோம் என மிரட்டினார்கள். அவர்களுக்கு ஏன் எங்கள் மீது அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை, ஆனால் அவ்வளவு கோபம் கொண்டு காணப்பட்டனர். இதனால் ஆர்டர் செய்த உணவு முழுமையாக கிடைப்பதற்கு முன்பே அங்கிருந்து துரத்தப்பட்டோம் என தெரிவித்தார்.
நாங்கள் துன்புறுத்தப்பட்ட வீடியோ லண்டனில் பலராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது என்பது எங்களை மேலும் புண்படுத்தியுள்ளது என தெரிவித்தார். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான முயற்சியில் இறங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.