பிரித்தானியாவின் EPR திட்டம் - குடும்பங்களின் மளிகைச் செலவு அதிகரிக்கும் அபாயம்
பிரித்தானியாவின் Extended Producer Responsibility (EPR) திட்டம், பொதுமக்களின் மளிகைச் செலவுகளை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக Aquapak நிறுவனம் எச்சரித்துள்ளது.
2025 அக்டோபரில் அமுலுக்கு வந்த இந்த திட்டத்தின் கீழ், பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பயன்படுத்தப்படும் பொருட்களின் வகை அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.
Red, Amber, Green (RAG) முறையின் படி, அதிகம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு குறைந்த கட்டணம், மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படும்.
Aquapak தெரிவித்ததாவது,
இந்த திட்டம் சரியான வரையறைகள் இல்லாமல் செயல்படுவதால், பல நிறுவனங்கள் கட்டணத்தை நேரடியாக நுகர்வோரிடம் இருந்து பெறுகின்றன.

இதனால், ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பம் வருடத்திற்கு 312 பவுண்டு கூடுதல் செலவினைச் சந்திக்க வேண்டியிருக்கும் என NimbleFins ஆய்வு கூறுகிறது.
தற்போது, ஒரு குடும்பம் வாரத்திற்கு 120 பவுண்டு செலவிடுகிறது. புதிய கட்டணங்களால் இது 0.5 சதவீதம் அதிகரிக்கும் என Bank of England கணித்துள்ளது.
பிரித்தானிய EPR திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி முன்னேறினாலும், அதன் நடைமுறை குழப்பங்கள் பொதுமக்களின் செலவுகளை உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK EPR program grocery bills impact, Aquapak warns UK packaging reform costs, Extended Producer Responsibility UK 2026, UK grocery price rise packaging fees, RAG system packaging charges UK, UK EPR scheme consumer cost warning, UK packaging recycling law grocery prices, UK EPR program household expenses 2026, UK packaging responsibility law impact, UK grocery inflation EPR program news