பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: புலம்பெயர்தல் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொள்ளும் ஒப்பந்தம் புலம்பெயர்தல் மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என்று பார்க்கலாம்.
புலம்பெயர்தல் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்
முன்னாள் பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கம் காட்டாததால் சட்டவிரோத புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதாக வாக்களித்த அவரது வாக்குறுதியை அவரால் நிறைவேற்றமுடியவில்லை.
ஆனால், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறது.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் முடிவாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, இருதரப்பும் புலம்பெயர்தல் தொடர்பில் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதை அதிகரிக்க உள்ளன.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து இந்த தகவல் பரிமாற்றத்தை பிரித்தானியா இழந்துவிட்டிருந்தது.
மேலும், ஆட்கடத்தலை கட்டுப்படுத்தும் முயற்சியில், ’whole route approach’ வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதாவது, புலம்பெயர்வோர் வழக்கமாக பயணிக்கும் பாதைகள் முதலான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அடுத்ததாக, புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் விடயத்திலும், இருதரப்பும் இணைந்து செயலாற்ற உள்ளன. அதாவது, மூன்றாவது நாடுகளுக்கு புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்பிவைக்கும் திட்டமும் உள்ளது.
இதுபோக, ஐரோப்பிய புலம்பெயர்தல் ஏஜன்சிகள் முதலான பல்வேறு அமைப்புகள் இணைந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்ள இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |