ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் பிரித்தானியா: விரைவில் பேச்சுவார்த்தைகள்...
UK and EU officials to discuss freedom of movement: தடையில்லா போக்குவரத்து தொடர்பில் விரைவில் பிரித்தானிய பிரதிநிதிகளும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தைகள் நடத்த இருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணையும் விடயம் தொடர்பிலான நடவடிக்கைகளை பிரித்தானியா விரைவில் துவங்க உள்ளது.
விரைவில் பேச்சுவார்த்தைகள்...
பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய தான் முயற்சி செய்ய விரும்புவதாகவும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெறும் அறிக்கையுடன் நிற்காமல், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவு குறித்து, பிரித்தானிய அலுவலர்களும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்களும் விவாதிக்க இருப்பதாக, வர்த்தகச் செயலரான ஜோனத்தன் ரெய்னால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், தடையில்லா போக்குவரத்து முதலான பல்வேறு விடயங்கள் தொடர்பில், இருதரப்பு அலுவலர்களும், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெற இருக்கும் உச்சி மாநாட்டுக்கு முன் கூடி விவாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடையில்லா போக்குவரத்து என்பது, ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை முறையில் இணையும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் குடிமக்கள், அந்த நாட்டிற்கு பயணிக்கவும், அங்கு படிக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கும் வகையிலான ஒரு முன்நிபந்தனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.