ஆப்கானிஸ்தானிலிருந்து முதல் ஓரினசேக்கையாளர் குழுவை வெளியேற்றியது பிரித்தானியா
ஆப்கானிஸ்தானிலிருந்து 29 பேர் கொண்ட ஓரினச்சேர்க்கையாளர்களின் முதல் குழு பிரித்தானாவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் (Liz Truss) மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் உரிமை அமைப்புகளின் தலையீட்டின் விளைவாக, ஆப்கானிஸ்தானில் இருந்து 29 பேர் கொண்ட (LGBT+) ஓரினச்சேர்க்கையாளர்களின் முதல் குழு பிரித்தானியா வந்தடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமையன்று பிரித்தானிய அரசங்கள் வெயிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற பிரித்தானிய அரசாங்கத்தால் உதவப்பட்ட எல்ஜிபிடி ஆப்கானியர்களின் முதல் குழு வெள்ளிக்கிழமை பிரிட்டனுக்கு வந்து, அவர்களின் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் போரினால் பாதிக்கப்பட்ட LGBT+ சமூகத்தின் சமத்துவத்திற்காக குரல்கொடுத்து நின்ற மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களும் அடங்குவர்.
மீட்கப்பட்ட LGBT+ குழு ஒரு தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் பாதிக்கப்படக்கூடிய LGBT+ மக்கள் வரும் மாதங்களில் பிரித்தானியாவுக்கு வருவார்கள் என்று அரசாங்கம் உறுதியளித்தது.
வெள்ளிக்கிழமை வந்த ஆப்கானியர்களுக்கு பாதுகாப்பான வீடுகள் நிறுவப்பட்டு வருகின்றன என்று LGBT+ அகதிகளை ஆதரிக்கும் தொண்டு நிறுவனமான மைக்ரோ ரெயின்போவின் (Micro Rainbow) தலைமை நிர்வாகி Sebastian Rocca தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஓரினச்சேர்க்கையாளர் உரிமைக் குழுவான Stonewall மற்றும் கனடாவின் Rainbow Railroad ஆகியவை இந்த வெளியேற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்தன.
“இருப்பினும், எங்கள் பணி இன்னும் முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் உட்பட LGBTQ+ ஆப்கானியர்களுக்கான சர்வதேச ஆதரவிற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுவோம், மேலும் UK-க்கு வரும் LGBTQ+ ஆப்கானியர்களுக்கு அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவை வழங்குவதை உறுதிசெய்ய UK அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று ஸ்டோன்வால் அமைப்பு தெரிவித்துள்ளது.