மீண்டும் Goldman Sachs-ல் இணையும் ரிஷி சுனக் - மூத்த ஆலோசகராக நியமனம்
முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மீண்டும் பிரபல அமெரிக்க நிதி நிறுவனத்தில் இணைத்துள்ளார்.
Financial Times வெளியிட்ட தகவலின்படி, அவர் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக சேர உள்ளார்.
2001 முதல் 2004 வரை கோல்ட்மேன் சாக்ஸில் ஜூனியர் நிதி ஆலோசகராக பணியாற்றிய சுனக், தற்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்க உள்ளார்.
கோல்ட்மேன் சாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன் (David Solomon), “ரிஷி சுனக் எங்களுடன் மீண்டும் சேருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அவர் உலகளாவிய பொருளாதார மற்றும் புவியியல் சிக்கல்களில் ஆலோசனை வழங்க, எங்கள் குழுவுடன் நெருங்கிய முறையில் பணியாற்றுவார்,” என கூறியுள்ளார்.
ஜூலை 2024-இல் நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய சுனக், அதன்பின்னர் பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகியிருந்தார்.
இப்போது இந்த வேலை மூலமாக அவருக்கு கிடைக்கும் சம்பளத்தை Richmond Project எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளார்.
சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா முர்த்தி ஆகியோரது மொத்த சொத்து மதிப்பு £640 மில்லியனாகும்.
இவர்களின் பெரும்பாலான செல்வம் அக்ஷதாவின் இந்தியா சார்ந்த இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள பங்குகளிலிருந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rishi Sunak Goldman Sachs adviser, Former UK PM joins Wall Street, Rishi Sunak career after politics, Goldman Sachs hires Rishi Sunak, Rishi Sunak post-PM role, Akshata Murty Infosys stake, UK politics 2024 election results, Richmond Project Rishi Sunak