ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்: பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை
ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், அது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் சில எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்
ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர், விமான நிலையத்தின் ஓடுபாதையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட, கடும் அதிர்ச்சி உருவானது.
பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை இப்படி ஜேர்மன் விமான நிலையமொன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் அச்சுறுத்தல் என பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அதாவது, அந்த ட்ரோன் உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ட்ரோனை ரஷ்யாவுடன் இணைத்து எச்சரித்துள்ள வில் கெடஸ் (Will Geddes) என்னும் அந்த நிபுணர், புடின் நினைத்தால் பயணிகள் விமானம் ஒன்றைக் கூட தாக்கி அழிக்க முடியும் என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இப்போது ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், ட்ரோனுடன் கதிரியக்கப் பொருட்களையோ, உயிரி ஆயுதங்களையோ கூட இணைக்கமுடியும் என்றும் வில் கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானிய விமான நிலையங்களைப் பொருத்தவரை, ட்ரோன் ஒன்றை காரிலிருந்தோ, வீட்டிலிருந்தோ கூட இயக்கலாம்.
அப்படி ஒரு ட்ரோன் வெடிக்கச் செய்யப்படுமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார் அவர்.
ஆக, ஜேர்மனியில் ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள விடயம், இத்தகைய ட்ரோன்களால் ராணுவங்களுக்கு மட்டுமல்ல, பயணிகள் விமானங்களுக்கும் ஆபத்து உள்ளது என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளார் வில்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |