பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்! உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்பு
விந்தணு தானம் செய்யும் செயல்முறை பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
பிரித்தானியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிரித்தானியாவில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை பத்து குடும்பங்களுக்கு மேல் கொடுக்க முடியாது.
ஆனால், விந்தணுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை.
பிரிட்டிஷ் சட்டத்தில் உள்ள இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, விந்தணு தானம் தொழில்துறை மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு புதிய அறிக்கையின்படி, சிலருக்கு பிரித்தானியாவிலும் வெளிநாட்டிலும் (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில்) பத்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் (Half-Siblings) இருக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக 'Guardian' நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. இதன்படி, கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானியா விந்து மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்து வந்தது.
பின்னர் நிலைமை முற்றிலும் மாறியது. 2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும், 7,542 straw விந்து பிரித்தானியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பாரிய விந்து மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் (Cryos) இந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியாவின் Manchester-ல் ஒரு பிரிவைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"ஏற்றுமதியில் 90% பங்கைக் கொண்ட ஐரோப்பிய விந்து வங்கி (European Sperm Bank), ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என்ற உலகளாவிய வரம்பைப் பயன்படுத்துகிறது, மேலும் அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் என்று மதிப்பிடுகிறது" என்று அறிக்கை கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sperm Donation Out Of Control In United Kingdom, UK exports sperm to other countries, Europe, UK Sperm Donation, UK Sperm export