கேரளாவை விட்டுச் செல்ல மனமில்லாத பிரித்தானிய F-35B போர் விமானம்., கேரள சுற்றுலாத்துறை விளம்பரம்
கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளாவில் பழுதாகி நின்றுகொண்டிருக்கும் பிரித்தானிய போர் விமானத்தை வைத்து கேரள சுற்றுலாத்துறை சிறப்பான சம்பவம் செய்துள்ளது.
ஜூன் 14-ஆம் திகதி கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்த பிரித்தனைய கடற்படைக்குச் சொந்தமான F-35B ஸ்டெல்த் போர் விமானம், 18 நாட்கள் ஆன பின்னும் அங்கேயே தங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
தற்போது, இந்த விமானம் குறித்து கேரளா சுற்றுலா துறை நகைச்சுயான விளக்கம் அளித்துள்ளது.
“Kerala, the destination you'll never want to leave” என்ற தலைப்புடன், கேரள சுற்றுலாத்துறை வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது, கேரளாவிற்கு வந்துவிட்டால் யாருக்கும் திரும்பிச் செல்லும் மனம் வராது என குறிப்பிடும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அந்த F-35B போர் விமானம் தென்னை மரங்களுக்கு நடுவே பிறப்பது போன்று AI தொழுநுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில், அந்த விமானமே "Kerla is such an amazing place, I don't want to leave. Definitely Recommended" என 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது இன்னும் வேடிக்கையாக அமைந்துள்ளது.
இந்த கருத்து, The_Fauxy என்ற புனை செய்தி இணையதளத்தில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டது.
இவ்விமானம், HMS Prince of Wales கேரியர் ஸ்ட்ரைக் குழுவுடன் இணைந்து கடலுக்குள் பயிற்சி நடத்தியபோது, ஏற்பட்ட கோளாறு காரணமாக கேரளா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இந்திய விமானப்படை அதன் தரையிறக்கத்தையும், எரிபொருள் நிரப்புவதையும் ஒத்துழைத்தது.
தொடர்ந்து புறப்பட்டுச் செல்லும் முன், ஹைட்ராலிக் தொழில்நுட்ப பழுது ஏற்பட்டது. Royal Navy நிபுணர்களின் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது 40 நிபுணர்கள் கொண்ட குழு, சிறப்பு வாகனத்துடன் கேரளாவிற்கு வர உள்ளது.
இனிமேலும் எப்போதெல்லாம் சுற்றுலா பயணிகள் கேரளாவை விட்டு செல்ல தயங்குகிறார்களோ, F-35B ஜெட்டை நினைவுபடுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |