பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு பெரும் இழப்பு: ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வற்புறுத்தல்
பிரெக்சிட்டால் பிரித்தானிய வர்த்தகத்துக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரெக்சிட்டால் பிரித்தானிய வர்த்தகத்துக்கு பெரும் இழப்பு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், அதாவது, பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டதால், வர்த்தக ரீதியாக பிரித்தானியா பெரும் இழப்பை சந்தித்துவருகிறது.
பிரெக்சிட்டால் ஆண்டொன்றிற்கு சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுங்க அமைப்பில் இணையவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
இன்னொரு பக்கமோ, பிரெக்சிட்டால் வர்த்தக ரீதியான ஆவண வேலைகளை முடிக்க மிகவும் தாமதமாகிறது.
ஆவண வேலைகளை முடிப்பதற்கு முன் உலகத்தை 15 முறை சுற்றிவந்துவிடலாம் என The Independent ஊடகம் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |