ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி

United Kingdom France
By Balamanuvelan Sep 01, 2026 06:05 AM GMT
Report

British family pleads with French authorities to release body of relative who died in Channel: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்த நபரின் உடலை ஒப்படைக்குமாறு பிரித்தானியக் குடும்பம் ஒன்று பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளது.

பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்றின் முன் ஒரு கூட்டம் சீக்கியர்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்

பிரான்சிலுள்ள Dunkirk நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த நபர்கள் கையில் வைத்துள்ள பதாகைகளில் ஒரு சீக்கியரின் படம் இடம்பெற்றுள்ளது. 

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி | Uk Family Pleads French Authority To Release Body

அவரது பெயர், ஜஸ்மீத் வத்வா (Jasmeet Wadhwa, 32). இந்த ஜஸ்மீத், தனது தாயாகிய ஹர்பன்ஸ் கௌர் வத்வாவுடன் (Harbans Kaur Wadhwa) ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.

ஏப்ரல் மாதம், பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், தன் தாய் கண் முன்னே உயிரிழந்துள்ளார் ஜஸ்மீத். 

உலக பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தல்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை

உலக பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தல்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை

கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி

விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தும் அவரது தாயும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடமிருந்து தப்பி பிரான்சுக்கு வந்துள்ளார்கள். 

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி | Uk Family Pleads French Authority To Release Body

அவர்கள் எங்கிருந்து புறப்பட்டவர்கள், ஏன் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.

அப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி, பிரான்ஸ் வந்தடைந்த ஜஸ்மீத்தும் அவரது தாயும் சிறுபடகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, ஜஸ்மீத்தும், சூடான் நாட்டவர் ஒருவரும் ஆங்கிலக்கால்வாயில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.  

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி | Uk Family Pleads French Authority To Release Body

அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல் பிரான்சுக்கே திரும்பக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜஸ்மீத்தின் தாயும் பிரான்சுக்கே சென்றுள்ளார்.

இப்போது, பிரான்சில் வைக்கப்பட்டுள்ள ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவருடைய உறவினர்கள் பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகத்தான் Dunkirk நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தின் உடலைக் கோரி பிரான்ஸ் சென்றுள்ளவர்கள், பிரித்தானியர்கள். அதாவது, பிரித்தானியக் குடியுரிமை பெற்ற சீக்கியர்கள்.

ஆக, ஜஸ்மீத்தின் உறவினர்கள் பிரித்தானியாவில் முறைப்படி அனுமதி பெற்று வாழ்ந்துவரும் நிலையில், ஜஸ்மீத் ஏன் முறைப்படி பிரித்தானியா வர விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், ’one in, one out’ திட்டத்தின் கீழ் தன்னை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு ஜஸ்மீத்தின் தாய் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், அவரிடம், அவர் ஆப்கன் நாட்டவர் என்பதற்கான அடையாள ஆவணமான Tazkira என்னும் ஆவணம் இல்லை.

ஆகவே, பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில்தான், ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, பிரித்தானியாவிலிருக்கும் அவரது உறவினர்கள் பிரான்சுக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

பொதுவாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படுவதில்லை.

அவர்கள் உடலை ஒப்படைக்கக்கோரி அவர்களுடைய உறவினர்கள் இதுபோல் வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதில்லை.

ஆகவேதான் இந்த செய்தி கவனம் ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US