கால்பந்து மைதானம் அருகில் கூட செல்லக்கூடாது - பிரித்தானியருக்கு விதிக்கப்பட்ட தடை
கால்பந்து வீரரை இனவெறி துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நடந்த Premier League தொடக்க போட்டியில் Bournemouth அணியின் வீரர் அன்டோயின் செமென்யோ (Antoine Semenyo) மீது இனவெறி அடிப்படையிலான தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் லிவர்பூல் அணிக்கு எதிரான Anfield மைதானத்தில் நடந்தபோது செமென்யோ நேரடியாக நடுவரிடம் புகார் அளித்தார். இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
47 வயதான லிவர்பூல் நகரைச் சேர்ந்த அந்த நபர் இனவெறி சார்ந்த பொது ஒழுங்குமீறல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணை விதிகளின் கீழ் அவர் பிரித்தானியாவில் நடைபெறும் எந்தவொரு ஒழுங்குபடுத்தப்பட்ட கால்பந்து போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது.
மேலும், எந்த மைதானத்திற்கு ஒரு மைல் தூரத்திற்கு அருகில் கூட செல்லக்கூடாது.
25 வயதாகும் செமென்யோ, கானா நாட்டைச் சேர்ந்தவர். அப்போட்டியில் அவர் 2 கோல்களை அடித்துள்ளார்.
அவர் தனது சமூக ஊடகங்களில், "இந்த இறைவாக்கு எனக்கு என்றும் நினைவிலிருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Antoine Semenyo, Bournemouth FC, Liverpool vs Bournemouth, Premier League racism, UK football stadium ban, racist abuse football, Anfield incident, Ghana footballer Semenyo, Premier League 2025