பிரித்தானியாவின் அடுத்த நெருக்கடி! 150,000 விலங்குகள் கொல்லப்படும் அபாயம்
பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறையை தொடர்ந்து, பன்றி இறைச்சி மற்றும் இறைச்சி நெருக்கடி தலைதூக்கியுள்ளது.
பிரெக்சிட் மற்றும் கொரோனா பெருந்தொற்று இரண்டும் இணைந்து இந்த ஆண்டு பிரித்தானிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது நாடு முழுவதும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை விட்டுச்சென்றது, இதனால் எரிபொருள் மற்றும் பல்பொருள் அங்காடி விநியோகத்திற்கு தேவையான கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறை உள்ளது.
இந்தநிலையில், நாட்டில் சுமார் 10,000 இறைச்சிக் கூடங்களில் கசாப்புக் கடைக்காரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் 'acute welfare disaster' ஏற்படும் என்றும் தொழில்துறை எச்சரித்துள்ளது.
Picture: Getty Images/Cultura RF
ஆதாவது, பிரித்தானியா அரசாங்கம் இந்த தொழிலாளர் பற்றாக்குறைக்கு அவசர நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்றால், அடுத்த 10 நாட்களில் 150,000 விலங்குகள் கொல்லப்படும் அபாயம் உள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கம் (National Farmers' Union) எச்சரித்துள்ளது.
கசாப்புக் கடைக்காரர்கள் பற்றாக்குறை என்றால் பன்றிகளை அறுக்க முடியாது என்பதால் 'பன்றிகளைத் தவிர்க்க வேண்டும்' என்று சங்கம் கூறுகிறது.
இறைச்சி கூடத்தில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான பன்றிக்குட்டிகளை அறுக்க நேர்ந்ததாக, பெயரிடப்படாத யார்க்ஷயர் ஸ்டாக்மேன் ஒருவர் கூறியுள்ளார்.
(DANIEL LEAL-OLIVAS/AFP/Getty Images)
இந்நிலையில், தேசிய பன்றி சங்கம் விவசாயிகள் பன்றிகளை செயலாக்க முடியாவிட்டால் சில வாரங்களுக்குள் 'acute welfare disaster ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கும் நேரத்துக்கு சந்தைக்கு செல்லாத பன்றிகளை கொல்வதை தவிர வேறு வழிதெரியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பிரித்தானிய பொருளாதாரம் தொடர்ந்து அழிவை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.