தாயின் புதிய காதலன் மீது பொங்கிய பொறாமை! பிரித்தானிய கணவன் மற்றும் மகன் செய்த செயல்
பிரித்தானியாவில் மனைவியின் புதிய காதலனை ஆத்திரத்தில் கொலை செய்த கணவன் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் புதிய காதலன்
கொலை பிரித்தானியாவில் கடந்த ஜனவரி 23ம் திகதி மனைவி கெர்ரி பெக்காமுடன் உறவில் இருந்த மேத்யூ ராட்வெல்(39) என்பவரை கணவர் வெய்ன் பெக்காம்(Wayne Peckham, 48) மற்றும் அவரது மகன் ரிலே பெக்காம்(Riley Peckham, 23) இருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
நோர்போக்(Norfolk) டவுன்ஹாம் மார்க்கெட்டின் புல்ரஷ் க்ளோஸில் உள்ள அவர்களது வீட்டுக்குச் சென்ற தந்தையும், மகனும் காதலன் ரோட்வெல் தாக்க முற்பட்டனர்.
ஆனால் ரோட்வெல் மாடியில் ஒளிந்து கொண்டு 999 என்ற எண்ணில் பொலிசாருக்கு அழைத்தார்.
Sky News
மகன் ரிலே பெக்காம் மற்றும் தாயின் புதிய காதலன் ராட்வெல் ஆகியோர் இடையே மாடியில் சண்டை நிகழ்ந்தது, மனைவி கெர்ரி பெக்கம் கணவன் வெய்ன் பெக்காமை கீழே தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
இருப்பினும் தொடர்ந்து தாக்கப்பட்ட ரோட்வெல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கணவன் வெய்ன் பெக்காமை உடனடியாக கைது செய்தனர் மற்றும் மகன் ரிலே பெக்காம் இரண்டு மணி நேரம் கழித்து உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Sky news
தந்தை, மகன் இருவரும் முதலில் குற்றத்தை மறுத்தனர், ஆனால் நார்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றவாளிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நோர்போக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கணவன் வெய்ன் பெக்காமிற்கு குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் மற்றும் ரிலே பெக்காமிக்கு 18 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.