பிரித்தானியாவின் மிக பருமனான மனிதர் குறைந்த வயதில் திடீரென உயிரிழப்பு! வெளியான காரணம்
பிரித்தானியாவின் மிக பருமனான மனிதராக கருதப்படும் மேத்யூ கிராபோர்ட் தனது 37வது வயதில் உயிரிழந்துள்ளார்.
55 ஸ்டோன் (கிட்டத்தட்ட 350 கிலோ) எடை கொண்டவராக மேத்யூ இருந்தார்.
கடந்த 2018ல் இவர் பெயர் தலைப்பு செய்தியில் தென்பட்டது, இதற்கு காரணம் வீட்டில் பராமரிப்பு இல்லாததால் 18 மாதங்களுக்கு Nottingham மருத்துவமனையில் நான்கு மருத்துவமனை படுக்கைகள் அவர் வசதிக்காக ஒதுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது தான்.
அதாவது நான்கு பேரின் இடத்தை அவர் ஒருவரே எடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் செப்சிஸ் எனப்படும் தொற்றுகளால் ஏற்படும் ஒரு உயிர்கொல்லி நோய் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் மேத்யூ நேற்று உயிரிழந்துள்ளார்.
அவர் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேத்யூவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பெரிய சோகமான செய்தி என்றும் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.