பிரித்தானியாவில் 8000 லிட்டர் எரிபொருளுடன் பற்றி எரிந்த சூப்பர் கப்பல்: மீட்பு பணி தீவிரம்!
பிரித்தானியாவின் டெவோனில் உள்ள டோர்குவே மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 85 அடி நீளமுள்ள சூப்பர் படகில் தீபிடித்து ஏறிந்ததை தொடர்ந்து அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
டெவோனில் உள்ள டோர்குவே மெரினா கடற்கரை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 6 மில்லியன் மதிப்புள்ள மற்றும் 85 அடி நீளம் கொண்ட சூப்பர் படகு ஒன்று சனிக்கிழமை மதியம் 12:10 மணிக்கு தீபிடித்து ஏறியத் தொடங்கியது.
இந்த விபத்தை நேரில் கண்ட பார்வையாளர் தெரிவித்த கருத்தில், திடீரென மிகப் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டது, அதனை தொடர்ந்து கரும்புகையுடன் கூடிய நெருப்பு வெடி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்துப்பகுதியில் இருந்து பொதுமக்களை வேகமாக வெளியேற்றி கப்பலின் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
REUTERS
இதுத் தொடர்பாக பொலிஸார் தெரிவித்த தகவலில், தீபிடித்து விபத்துக்குள்ளான சூப்பர் படகில், 8000 லிட்டர் ஏரிப்பொருள் இருந்தாகவும் அதனால் துறைமுகத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்களை தங்களது வீடுகளின் கதவு மற்றும் சன்னல்களை அடைத்துகொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது படகில் பற்றி எரியும் தீ ஓரளவிற்கு குறைத்து இருக்கிறது, இருப்பினும் படகு துறைமுகத்தின் கயிறுகளில் இருந்து விலகி விட்டதால் அதனை தீயணைப்பு துறையினர் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் போர் மூலோபாய நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது: பிரித்தானிய உளவுத்துறை தகவல்!
அத்துடன் இந்த திடீர் தீவிபத்தில் பொதுமக்களுக்கு எந்த காயங்களும் இதுவரை ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக துறைமுகத்தின் கரைகள் அதிகாரிகளால் தற்காலிகமாக முடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
REUTERS