தடையை மீறி ரஷ்யாவுடன் பிரித்தானிய நிறுவனம் வர்த்தகம்! பில்லியன் டொலர் கணக்கில் மின்னணு சாதனங்கள் விற்பனை

Russo-Ukrainian War Russian Federation
By Ragavan Apr 08, 2023 08:30 AM GMT
Report

பிரித்தானிய நிறுவனமொன்று தடையை மீறி ரஷ்யாவிற்கு பில்லியன் கணக்கில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றது அம்பலமாகியள்ளது.

$1.2 பில்லியன் மின்னணுப் பொருட்கள்

உக்ரைன் மீதான மாஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பிரித்தானிய நிறுவனமொன்று சுமார் $1.2 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 38,104 கோடி) மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ரஷ்யாவிற்குள் விற்பனை செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹவாய், இன்டெல், ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளால் தயாரிக்கப்பட்ட சர்வர்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி பாகங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை அனுப்பியதாக Mykines Corporation LLP என்ற நிறுவனத்தை ரஷ்ய பதிவுகள் பட்டியலிட்டுள்ளன.

அனுப்பப்பட்ட பொருட்களில் உயர்தர மைக்ரோசிப்கள், டெலிகாம் உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தக்கூடிய சர்வர்கள் ஆகியவையும் அடங்கும்.

தடையை மீறி ரஷ்யாவுடன் பிரித்தானிய நிறுவனம் வர்த்தகம்! பில்லியன் டொலர் கணக்கில் மின்னணு சாதனங்கள் விற்பனை | Uk Firm Ships Electronics Russia Despite Sanctions

கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது

சுங்கத் தாக்கல்களின்படி, நிறுவனம் அனுப்பிய பட்டியலிடப்பட்ட பொருட்களில் குறைந்தபட்சம் 982 மில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள், ரஷ்யா மீதான பிரித்தானிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

உக்ரைன் படையெடுப்பிற்கு முன்னர் Mykines நிறுவனம் ரஷ்யாவில் செயலில் இருந்தது, ஆனால் வர்த்தக பதிவுகளின்படி போர் தொடங்கிய பின்னரே அதன் வணிகம் திடீரென தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ரஷ்யாவுடன் பிரித்தானிய நிறுவனம் வர்த்தகம்! பில்லியன் டொலர் கணக்கில் மின்னணு சாதனங்கள் விற்பனை | Uk Firm Ships Electronics Russia Despite SanctionsIgor Ivanko / Moskva News Agency

பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்த பொருட்களை ரஷ்யாவிற்கு அனுப்புவது, மூன்றாம் நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்தாலும் பொருளாதாரத் தடைகளை மீறுவதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொருளாதாரத் தடைகள்

பிப்ரவரி 2022 உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உட்பட பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதில் ஆச்சரியமளிக்கும் மற்றோரு தகவல் என்னெவென்றால், மைக்கின்ஸின் உரிமையாளர் விட்டலி பொலியாகோவ் (53) உக்ரைனில் வசிப்பவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரேனிய ஓப்பன் சோர்ஸ் புலனாய்வுக் குழுவான மோல்ஃபாரின் கூற்றுப்படி, விட்டலி பொலியாகோவ் என்று ஆராய்ந்தபோது, ஒருவர் மட்டுமே பொருந்துகிறார்: அவர் உக்ரேனிய மாநில சுரங்க நிறுவனத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர் என்று காட்டுகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US