பிரித்தானியாவின் முதல் பெண்மணி: பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி குறித்த சுவாரசிய தகவல்கள்
அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.
அக்ஷதா தன் non-domicile அந்தஸ்தை விட்டுக் கொடுத்தார்.
பெங்களூரு பெண்ணும், இன்ஃபோசிஸ் நிறுவனர்களான சுதா மூர்த்தி மற்றும் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி பிரித்தானியாவின் முதல் பெண்மணியாக பதவியேற்க உள்ளார்.
பிரித்தானியாவில் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை பெற்று ரிஷி சுனக், ஒரு வெள்ளையர் அல்லாத முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 45 நாட்களுக்குப் பிறகு லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்தபோது ரிஷி சுன்னத் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று ரிஷியை தவிர, அவரது குடும்பமும் மக்களின் கவனத்தில் வந்துள்ளது. குடும்பத்துடன் எண் 10 டவுனிங் தெருவில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறவுள்ள நிலையில், மக்கள் பிரித்தானிய முதல் பெண்மணி அக்ஷதா மூர்த்தியைப் பற்றி மேலும் அறிய ஆர்வம் கட்டுகின்றனர்.
பிரித்தானிய முதல் பெண்மணி அக்ஷதா மூர்த்தி
அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.
அக்ஷதா மூர்த்தி இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள ஹூப்ளியில் பிறந்தார். அவரது பெற்றோர் மும்பையில் பணிபுரிந்ததால், ஹூப்ளியில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் அவர் வளர்ந்தார். பெண்ணியவாதியான சுதா மூர்த்தி, தன் மகள் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அக்ஷதா தனது பள்ளிக்கு ஆட்டோரிக்ஷாவில் சென்றார்.
அவர் பெங்களூரில் உள்ள பால்ட்வின் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதையடுத்து பொருளாதாரம் மற்றும் பிரஞ்சு படிக்க கலிபோர்னியா சென்றார். பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் ஆடை உற்பத்தியில் டிப்ளோமா, ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் & மெர்ச்சண்டைசிங் ஆகியவற்றைப் படித்தார்.
பின்னர், அவர் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிஏ படிப்பைத் தொடர்ந்தார்.
அவர் எம்பிஏ படிக்கும் போது தான் சுனக்கை சந்தித்தார் . அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஃபுல்பிரைட் அறிஞராக முதல் வகுப்பு பட்டம் பெற்றார். பெங்களூருவில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
அக்ஷதா மூர்த்தி 'Akshata Designs' என்ற உயர்தர பெண்கள் ஆடை பிராண்டை தனது சொந்த ஃபேஷன் லேபிளை நிர்வகிக்கிறார்.
அக்ஷதா Tendris-ன் இயக்குநராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி, New and Lingwood, Digme Fitness, Catamaran உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநராகவும் உள்ளார்.
லண்டனில் உள்ள கென்சிங்டனில் தனது கணவருடன் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வீடு உட்பட குறைந்தது நான்கு வீடுகளை அவர் வைத்திருக்கிறார். இருவரும் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் ஒரு குடியிருப்பையும் வைத்திருக்கிறார்கள்.
அக்ஷதாவிற்கு பிரித்தானிய குடியுரிமை இல்லை
அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 0.93 சதவீத பங்குகளைக் கொண்டிருப்பதால், 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறார். இருப்பினும், அவர் அதிகாரப்பூர்வமாக பிரித்தானியாவின் குடிமகன் அல்ல, எனவே, பிரித்தானியாவில் அவரது குடியுரிமை இல்லாத நிலை (non-domicile status) வெளிநாட்டு வருமானத்திலிருந்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதனால் அவர் மொத்தமாக லாபம் ஈட்டினாலும் வரி செலுத்த வேண்டியதில்லை, இது பொதுமக்களை கோபப்படுத்தியது மற்றும் சுனக்கின் பிரதமர் போட்டியில் சிக்கலை உருவாக்கியது.
இறுதியில், அக்ஷதா மனமுவந்து தன் non-domicile அந்தஸ்தை விட்டுக் கொடுத்தார். அவர் இப்போது தனது உலகளாவிய வருமானத்திற்கு பிரித்தானியாவில் வரிகளை செலுத்துகிறார்.