பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!
Aeroflot நிறுவனத்திற்கு தடை விதித்த பிரித்தானியாவுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனத்திற்கு பிரித்தானியா தடை விதித்தது.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ரஷ்யா வான்வழியில் பறக்க பிரித்தானியா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யாவுக்கான பிரித்தானியா நிறுவனங்களின் அனைத்து விமானங்களும் மற்றும் டிரான்சிட் விமானங்களும் தடைசெய்யப்படுவதாக ரஷ்ய விமான போக்குவரத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ரஷ்யாவின் Aeroflot நிறுவனத்திற்கு தடை விதித்த பிரித்தானியாவுக்கு ரஷ்யா கொடுக்கும் பதிலடி என விமான போக்குவரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.