படையெடுத்து வரும் பறக்கும் எறும்புகள்! யூரோ 2020 இறுதிப்போட்டிக்கு இடைஞ்சல்?
லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் மில்லியன் கணக்கான பறக்கும் எறும்புகள் படையெடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
யூரோ 2020-ன் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணியளவில், லண்டன் வெம்ப்லி மைதானத்தில் நடக்கவுள்ளது.
இத்தாலிக்கு எதிராக மோதவுள்ள இங்கிலாந்து அணி, 55 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளதால், அந்த ஆட்டத்துக்கு பிரித்தானியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், இந்த போட்டிக்கு தற்போது பூச்சிகள் ஒரு இடைஞ்சலாக வரக்கூடும் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.
பறக்கும் எறும்புகளுக்கு இது இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அவர் எப்போது வேண்டுமானாலும் இனப்பெருக்கத்திற்காக படையெடுக்கும். இந்த பூச்சிகள் தற்போது, லண்டனை நோக்கி படையெடுத்துள்ளன.
இதற்கு வானிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த பூச்சிகள், எங்கு மழைபெய்து மண் ஈரமாக உள்ளதே அந்த இடத்தை தான் இனப்பெருக்கத்திற்கு தெரிவு செய்கின்றன.
Our radar is picking up more than just #rain this morning – it's actually insects!
— Met Office (@metoffice) July 9, 2021
Whilst there are a few rain showers, many of the echoes are in fact insects ?#FlyingAnts #FlyingAntDay pic.twitter.com/ZWEyaxTnkD
இந்தநிலையில், வானிலை அலுவலகம் ஒரு ரேடார் படத்தை எடுத்தது பார்த்துள்ளது. அதில் லண்டன் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் மேகமூட்டம் போல் காணப்பட்டுள்ளது. ஆனால் அது மேகக்கூட்டம் அல்ல, அது பறக்கும் எறும்புகளின் கூட்டம் என்பது தெரியவந்தது.
வெம்ப்லி மைதானத்தில் ஆட்டம் தொடங்கப்படும் நேரத்தில், வானிலை பறக்கும் எறும்புகளுக்கு சாதகமாக இருந்தால், அது விளையாட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும். ஆட்டம் தொடர்ந்து நடைபெறும், ஆனால் பூச்சிகளால் வீரர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம், இது விளையாட்டை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.