பிரித்தானியாவில் அடர்ந்த மூடுபனி எச்சரிக்கை: பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்
UK Fog Warning travel disruption and safety tips: அடர்ந்த பனி மூட்டம் காரணமாக பிரித்தானியாவில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடர்ந்த பனி மூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக ஆபத்தான பயண சூழ்நிலைகள் உருவாக கூடும் என்றும், போக்குவரத்து சேவைகள் தீவிரமாக பாதிக்கப்படக் கூடும் என்றும் பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
York முதல் Bath வரையிலும், தென்கிழக்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு திங்கட்கிழமை காலை 11 மணி வரை இந்த வானிலை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
The recent satellite sequence shows locally dense fog patches only slowly clearing this morning, especially in the south 🛰️ Meanwhile, thicker cloud has been bringing some showers across the north and east https://t.co/ohT35e4Duu
— Met Office (@metoffice) November 8, 2026
இந்த வானிலை எச்சரிக்கைகள் காரணமாக பல்வேறு விமான சேவைகளில் தடங்கல், பொது போக்குவரத்தில் சிக்கல்கள் மற்றும் வழக்கத்தை விட நீண்ட நேர சாலை பயணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடுபனிக்கான காரணங்கள்
பிரித்தானியாவின் வளிமண்டலத்தில் நிலவும் சூழலே இந்த அடர்ந்த மூடுபனிக்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மெதுவான காற்று, மேகங்களற்ற வானம் மற்றும் நீண்ட இரவுகள் இந்த அடர்ந்த மூடுபனி உருவாவதற்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக வானிலை அதிகாரி நியாம் முர்ரே தெரிவித்துள்ளார்.
⚠️ Yellow weather warning issued ⚠️ Fog across parts of England and Wales Sunday 18:00 – Monday 11:00 Latest info 👉 https://t.co/TfU9Ok8qZD Stay #WeatherAware⚠️ https://t.co/18zyOz4uY7
— Met Office (@metoffice) November 8, 2026
எனவே வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மூடுபனி அதிகமாக காணப்படும் இடங்களில் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் தங்களது வழக்கமான பயண நேரத்தை விட கூடுதலான நேரத்திற்கு திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.