பிரித்தானியாவில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து வரும் பண வீக்கம்
பிரித்தானியாவில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பண வீக்கம், அதிகரித்து வருவதை அடுத்து அரசு விசாரணையை துவங்கியுள்ளது.
அதிகரிக்கும் பண வீக்கம்
பிரித்தானியாவில் கடந்த 1970 ஆண்டுகளில் சந்தித்த உணவு சங்கிலி பிரச்சனை, தற்போது அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவு பண வீக்கம் அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
@reuters
பிரித்தானியாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பகம் மற்றும் உணவு மற்றும் ஊரக வளர்ச்சி குழு உணவு சங்கிலியில், நடைபெறும் லாபங்கள் மற்றும் அபாயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய உள்ளது.
மேலும் அக்குழு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு மற்றும் உலகளாவிய பொருட்களின் விலைகள், போன்றவற்றின் விநியோக சங்கிலியில் உள்ள சிக்கல்களை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் விசாரணை
’ஒரு குடிமகன் நியாயமான விலையில் தங்கள் குடும்பங்களுக்கு நல்ல உணவை வழங்க சிரமப்படும் போது, உண்மையில் பிரச்சனை எங்கே என அறிந்து கொள்வது எங்களது தலையாய கடமை என EFRA குழுவின் தலைவரும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ராபர்ட் குட்வில் கூறியுள்ளார்.
@reuters
இம்மாத தொடக்கத்தில், குறைந்த மொத்த விலையை நுகர்வோருக்கு வழங்கத் தவறிய உணவு சில்லறை விற்பனையாளர்கள், மீது நடவடிக்கை எடுப்பதாக பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அதே சமயம் பிரித்தானியாவில், சிறிய எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சி, பல்பொருள் அங்காடிகளின் லாபத்தை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
உத்தியோகபூர்வ தரவு
கடந்த மார்ச் மாதத்தில் பிரித்தானியாவில் உணவு விலைகள் 19.1% அதிகமாக இருந்ததைக் காட்டியதாகவும், இது கடந்த 1977ஆம் ஆண்டின் ஏற்பட்ட பணவீக்கத்தை விட அதிகமென தெரிய வந்துள்ளது.
@reuters
அதே நேரத்தில் தொழில்துறை தரவுகளின்படி. ஏப்ரல் மாதத்தில், மளிகைப் பணவீக்கம் 17.3% ஆக இருந்தது, பாங்க் ஆஃப் இங்கிலாந்து கடந்த வியாழனன்று வெளியிட்ட தகவல் படி நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 10% க்கு மேல் இருந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் உணவு சில்லறை விற்பனையாளர்கள், 2023ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக விலை உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் பணவீக்க விகிதம் ஆண்டு முழுவதும் குறையும் என நம்புவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.