யூரோ 2020 இறுதி போட்டி இத்தாலிக்கு மாற்றப்படுமா? UEFA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் கொரோனா தொற்று அதிரிகரிப்பதன் காரணமாக, யூரோ 2020-ன் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் இத்தாலிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து UEFA அதன் முடிவை அறிவித்துள்ளது.
யூரோ 2020 கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இரண்டு அரை இறுதி போட்டிகள் ஜூலை 6 மற்றும் 7-ஆம் திகதிகளில் மற்றும் இறுதிப் போட்டி ஜூலை 11 திகதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளிநாட்டிலிருந்து பயணிக்கும் ரசிகர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இங்கிலாந்தின் தேசிய மைதானத்திலிருந்து இறுதிப் போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற, ஒரு தற்செயல் திட்டம் இருப்பதாக ஐரோப்பிய கால்பந்து நிர்வாக குழு வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.
மேலும், இங்கிலாந்தில் உள்ள வெம்ப்லே அரங்கம் வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிக்க முடியாவிட்டால் பரிசீலிக்கப்படும் மாற்று இடமாக ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் அரங்கமாக இருக்கும் என்று டைம்ஸ் செய்தித்தாள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, திங்களன்று பிரித்தானியாவில் 10,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன, இது ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த வாரத்தின் சராசரியை வீட்டா 4 மடங்கு அதிக பாதிப்பாகும்.
இதனால், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi), கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதால் இறுதிப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற அழைப்பு விடுத்தார்.
"தொற்றுநோய்கள் விரைவாக அதிகரித்து வரும் ஒரு நாட்டில்" இருப்பதை விட, ரோமில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு ஆதரவாக இருப்பதாக மரியோ டிராகி கூறினார்.
இதனால், இறுதி போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற குழப்பம் இருந்த நிலையில, இன்று EUFA அதன் இறுதி முடிவை தீர்மானமாக வெளியிட்டுள்ளது.
யூரோ 2020-ன் கடைசி மூன்று பெரிய ஆட்டங்களையும் வெம்ப்லேவில் நடத்துவதில் நடத்துவதில் UEFA உறுதியாக உள்ளது.
இது குறித்து யூஃபா செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், "யூரோவின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான இடத்தை மாற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை" என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.