ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை
பிரித்தானிய இராணுவத்திற்கு என செலவிட 28 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஸ்டார்மருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மோதலுக்கான நெருக்கடி
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான நிதி நிலையில் மிகப்பெரிய அளவிற்கு பற்றாக்குறை இருக்கும் என்று பாதுகாப்புப் படைத் தலைவர் பிரதமரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கான நெருக்கடி உருவாகியுள்ள நிலையிலேயே, இராணுவத்திற்கான செலவுகள் தொடர்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதனிடையே, அதி முக்கியமான ஆர்க்டிக் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவதால் கிரீன்லாந்து விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் என ஸ்டார்மர் நம்புகிறார்.
3 சதவீதமாக உயர்த்த
அமெரிக்கா பசிபிக் பகுதியில் கவனம் செலுத்தி அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரித்தானியா போதுமான அளவு செலவு செய்கிறதா என்பது குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்த ஸ்டார்மர் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மேலும் நிதி மற்றும் பொருளாதார நிலைமைகள் அனுமதிக்கும் போது அடுத்த நாடாளுமன்றத்தில் 3 சதவீதமாக உயர்த்தவும் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. இருப்பினும், மூத்த இராணுவ அதிகாரிகள் கணிசமாக அதிக முதலீடு தேவை என்று எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |