ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதப்படை
பிரித்தானிய ஆயுதப்படைகள், ரஷ்யாவின் ‘ஷாடோ ஃப்ளீட்’ எண்ணெய் கப்பலை ஆங்கிலக் கால்வாயில் (English Channel) கைப்பற்றியுள்ளன.
Smyrtos எனப்படும் இந்த கப்பல் காமெரூன் நாட்டு கோரியுடன் பயணித்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராயல் மெரைன் கமாண்டோஸ், தேசிய குற்றப்பிரிவு அதிகாரிகள், சினூக் ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள் மற்றும் Minehunter கப்பல்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை தடுக்க பிரித்தானியா நேரடியாக களத்தில் முன்னிலை வகித்த முதல் நடவடிக்கையாகும்.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷ்யாவிற்கு மேலும் ஒரு பெரிய தாக்கத்தை அளிக்கும் என்றும், புடின் நடத்தும் போருக்கு எரிபொருள் வழங்குபவர்களை ஒளிந்துகொள்ள அனுமதிக்கமாட்டோம் எனும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
கப்பல் தற்போது இங்கிலாந்தின் தெற்குக் கரையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த நடவடிக்கை பிரான்ஸ் அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
முன்பு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மட்டுமே இருந்த நிலையில், இப்போது நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |