பிரித்தானியர்களுக்கு இப்போதைக்கு இது தேவையில்லை! நிபுணர்கள் நம்பிக்கை

Vaccine Booster UK News Omicron Fourth Dose
By Ragavan Jan 08, 2022 03:53 AM GMT
Report

பிரித்தானியர்களுக்கு இப்பேதைக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கோவிட்-19 வைரஸின் தீவிர நோய்க்கு எதிராக பூஸ்டர் டோஸ் (மூன்றாவது டோஸ்) இன்னும் வலுவான பாதுகாப்பை வழங்குவதால் பிரித்தானியர்களுக்கு இன்னும் நான்காவது தடுப்பூசி தேவையில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

UK Health Security Agency-யின் (UKSHA) கூற்றுப்படி, மூன்றாவது ஜாப் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிராக 90 சதவீத பாதுகாப்பு உள்ளது.

ஆனால், இதே மூன்று மாதங்களில் லேசான அறிகுறிகளுக்கு எதிரான பாதுகாப்பு சுமார் 30 சதவீதமாக குறைகிறது என்று அமைப்பின் தரவு காட்டுகிறது.

முதல் இரண்டு ஷாட்களை மட்டுமே எடுத்தவர்களுக்கு, கடுமையான நோய்க்கு எதிரான பாதுகாப்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு சுமார் 70 சதவீதமாகவும், ஆறு மாதங்களுக்குப் பிறகு 50 சதவீதமாகவும் குறைகிறது.

இதன் காரணமாக, தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான பிரித்தானியாவின் கூட்டுக் குழு, அதிகமான மக்கள் மூன்று டோஸ்களையும் பெறுவதை உறுதி செய்வதே முன்னுரிமை என்று கூறுகிறது.

Omicron மாறுபாட்டின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் நான்காவது தடுப்பூசியை வெளியிட்ட போதிலும் பிரித்தானியா இந்த நிலைப்பாட்டில் உள்ளது. மக்கள் தங்கள் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களைப் பெறுவதே அதன் முன்னுரிமை என்று JCVI கூறுகிறது.

அதேசமயம், பிரித்தானியாவில் 'இரண்டாவது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது டோஸ், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு (பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை' என்று UKSHA கூறியது.

இருப்பினும், கடுமையான நோயெதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், முதல் டோஸுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு நான்காவது தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை, 51.9 மில்லியன் முதல் டோஸ்கள், 47.6 மில்லியன் இடண்டாவது டோஸ்கள் மற்றும் 35 மில்லியனுக்கும் அதிகமான பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US