பிரித்தானியாவும் பிரான்சும் செய்து கொள்ளும் One in, one out ஒப்பந்தம்: சில தகவல்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள நிலையில், மேக்ரானும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் புலம்பெயர்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஒரு திட்டம் குறித்த விடயமும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றது.
One in, one out ஒப்பந்தம்
அதாவது, பிரித்தானியாவும் பிரான்சும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் One in, one out என அழைக்கப்படும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இருக்கின்றன.
இந்த One in, one out ஒப்பந்தம் என்பது என்னவென்றால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகாவிட்டாலும், இந்த திட்டத்தின் கீழ், வாரம் ஒன்றிற்கு 50 பேர் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |