பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம் முடிவு: அடுத்து என்ன?
2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்தும் வகையில், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தம் இன்று அதிகாலையுடன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இடைக்கால நடவடிக்கை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
பிரான்சுடனான புலம்பெயர்தல் ஒப்பந்தம்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரெஞ்சு பொலிசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காகவும், பொலிசார் ரோந்துப் பணிகள் மேற்கொள்வதற்ககாவும், தடுப்புக் காவல் மையம் ஒன்றை உருவாக்குவதற்காகவும், பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகள் தர பிரித்தானியா ஒப்புக்கொண்டது.

அந்த ஒப்பந்தம் இன்று அதிகாலையுடன் முடிவடைந்துவிட்டது.
ஆகவே, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள பிரித்தானியா தயாரானது.
புதிய ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் எத்தனை புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறதோ, அதற்கேற்ப பிரித்தானியா பிரான்சுக்கு நிதி வழங்கும் என்பது திட்டம்.
ஆனால், அதற்கு பிரான்ஸ் தரப்பில் எதிர்ப்பு உருவானது. ஆகவே, புதிய ஒப்பந்தம் நிறைவேறுவது தள்ளிப்போகிறது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், அதாவது, ஒப்பந்தங்கள் எதுவும் அமுலில் இல்லாத இந்த கால இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு, ஆட்கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்பட்டு அதிக அளவில் புலம்பெயர்வோரை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சிறுபடகுகள் மூலம் எந்த தடையுமின்றி கடத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஆகவே, அதைத் தடுப்பதற்காக, அடுத்த ஒப்பந்தம் தயாராவது வரை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 16.2 மில்லியன் பவுண்டுகள் வழங்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |