ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்! பிரித்தானியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரித்தானிய அரசின் புதிய சட்டத் திருத்தத்தின்படி அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள்
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. பிரித்தானிய அரசானது நிதி நடவடிக்கை செயற்குழு பரிந்துரையின்கீழ் ஈரான், மியான்மர், சிரியா உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் மற்றும் நிகரகுவா நாடுகளை பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் புதிய சட்டதிருத்தத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தானை பொறுத்தவரை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்து போரிடுவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அதனை வரவேற்பதாகவும் நிதி நடவடிக்கை செயற்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் சர்தாரி பூட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு நல்ல செய்தி. எங்களின் FATF செயல் திட்டங்கள் முன்கூட்டியே முடிந்ததைத் தொடர்ந்து, அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை அதிகாரபூர்வமாக பிரித்தானியா நீக்கியுள்ளது' என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
AFP/ File
பயங்கரவாத நிதி கட்டுப்பாடுகளை மேம்படுத்திய பாகிஸ்தான்
அத்துடன் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பட்டு அலுவலகம் (FCDO) பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிக்கிறது என குறிப்பிட்டுள்ள ஆவணத்தையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Some good news. The United Kingdom has officially removed Pakistan from its list of ‘High Risk Third Countries’ following our early completion of FATF action plans. ?? ? ?? pic.twitter.com/clcGHy5771
— BilawalBhuttoZardari (@BBhuttoZardari) November 14, 2022