காய்கறிகள், பழங்கள் கிடைக்காத நிலை உருவாகலாம்: பிரித்தானிய விவசாயிகள் எச்சரிக்கை
ஈரான் போர் காரணமாக பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள், பழங்கள் கிடைக்காத நிலை உருவாகலாம் என விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்.
பிரித்தானிய விவசாயிகள் எச்சரிக்கை
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாலும், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி நிறுத்தப்படலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

அதனால் பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள், பழங்கள் கிடைக்காத நிலை உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அரசு தலையிட்டு ஏதாவது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், பேசாமல் பண்ணைகளில் வேலை செய்வோரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, உற்பத்தியை நிறுத்திவிடலாமா என பல விவசாயிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார், காய்கறி பழங்கள் பயிரிடுவோர் கூட்டமைப்பின் செயலரான லீ ஸ்டைல்ஸ் என்பவர்.

பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் இதே நிலைதான். ஆக, விவசாயிகள் அஞ்சுவதுபோலவே, எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படாவிட்டால், காய்கறிகள், பழங்கள் கிடைக்காத நிலை உருவாகலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |