பிரித்தானிய எரிபொருள் தட்டுப்பாடு: லண்டனில் உள்ளிட்ட பகுதிகளில் மோசமடையும் நிலைமை..
பிரித்தானியாவில் லண்டன் உட்பட சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை மோசமாகி வருகிறது.
பிரித்தானியாவின் சில பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் எரிபொருள் பற்றாக்குறை மோசமாகி வருகிறது என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் (PRA) தலைவர் பிரையன் மேடர்சன் (Brian Madderson) கூறினார்.
இந்த பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஒரு "பெரிய பிரச்சனையாக" இருப்பதாக பிரையன் மேடர்சன் எச்சரித்தார்.
மாறாக, பிரித்தானியாவின் 8,300 பெட்ரோல் நிலையங்களில் கிட்டத்தட்ட 5,500 நிலையங்களை கொண்டுள்ள PRA, ஸ்காட்லாந்து , வட இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸின் சில பகுதிகள் "தனித்துவமான முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக கூறியது.
இங்கிலாந்தின் சுத்திகரிப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் இருப்பதாக அரசாங்கமும் சில்லறை விற்பனையாளர்களும் கூறுகிறார்கள், ஆனால் ஓட்டுனர்களின் பற்றாக்குறை சில பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதை குறைத்துள்ளது.
அதே நேரம், திங்கட்கிழமை முதல் சுமார் 200 இராணுவ வீரர்கள் தற்காலிகமாக ஓட்டுநர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள மேடர்சன், ஆனால் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.